கனடாவில் மேலும் ஒரு பள்ளி அருகே 182 பேரின் எலும்புகள் மீட்பு

கனடாவில் பாழடைந்த பள்ளி வளாகங்களில், புதையுண்ட மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலாம்பியா மாகாணத்தில் இரண்டு உண்டு உறைவிட (ரெஷிடன்ஷியல்) பள்ளிகளில், நூற்றுக்கணக்கான மாணவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் கண்டறியப்பட்டன. இப்போது 3ஆவதாக கிரேன்புரூக் பகுதியில் உள்ள மூடப்பட்ட யூகன்ஸ் மிஷன் பள்ளி மைதானம் அருகே 182 குறிக்கப்படாத கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களின் கல்லறைகள் என்பதை இப்போதைக்கு உறுதிசெய்ய இயலாது எனவும், இதுகுறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

3 × five =