தகுதியற்றவர் பிரதமர் போரிஸ் ஜான்சன்

முன்னாள் ஆலோசகர் பகிரங்க குற்றச்சாட்டு

பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆலோசகரும், அவருக்கு மிகவும் நெருங்கியவருமாக அறியப்பட்ட டொமினிக் கமிங்ஸ் கடந்த ஆண்டில் எழுந்த அதிகார மோதல் காரணமாக ஆட்சியிலிருந்து வெளியேறினார். அவ்வப்போது அரசுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் அவர், புதன்கிழமை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன் தகுதியற்றவர் என்றும், அறிவியல் ஆலோசனைகளை புறந்தள்ளி, பொதுமுடக்கத்தை தாமதப்படுத்தி, ஏராளமான உயிரிழப்புகளுக்கு அவர் வழிகோலியதாக டொமினிக் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த நிலைக்கு காரணமான சுகாதாரத் துறை செயலாளர் மாத் ஹான்காக்கையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ள வேண்டுமென அவர் ஆவேசமாக பேசினார். இதனால், பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Add your comment

Your email address will not be published.

eight + 10 =