பொதுமுடக்க தளர்வுகள் எதிரொலி

பிரிட்டனில் சீராகும் வேலைவாய்ப்பு

 

பிரிட்டனில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதால், வேலைவாய்ப்பு சீராகி வருகிறது. ஏராளமான நிறுவனங்கள் புதிய நபர்களை தேர்வு செய்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலாண்டில், 6,57,000 காலிப் பணியிடங்கள் இருந்தன. இதே எண்ணிக்கை இதற்கு முந்தைய காலாண்டில், 48,000 ஆக இருந்தது. மேலும், பிப்ரவரிக்கு முன்பாக 4.9 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை வீதம், மார்ச் மாதத்தில் 4.8 சதவீதமாக குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. மேலும், கரோனா பொதுமுடக்க தாக்கத்திலிருந்து வேலைவாய்ப்பு சந்தை மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களாக வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்த போதிலும், பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய நிலைமையை காட்டிலும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 1,28,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து தேசிய புள்ளியியல் அலுவலக பொருளாதார புள்ளியியல் பிரிவு இயக்குநர் டாரென் மோர்கன் கூறுகையில், பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக உணவு விடுதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய துறைகளில் வேலைவாய்ப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது என்றார்.

துணைவேந்தர் ரிஷி சுனக் கூறும்போது, பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்பை காக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஆய்வு விவரங்கள் குறிப்பிடுகின்றன. எல்லா வேலைவாய்ப்பையும் காக்க முடியாவிட்டாலும், எதிர்பார்த்ததை விட 20 லட்சத்துக்கும் கீழான நபர்கள்தான் தற்போது வேலையிழந்து வீட்டில் இருக்கின்றனர் என்றார்.

Add your comment

Your email address will not be published.

4 × four =