பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை தடுத்து நிறுத்த போவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். இந்த நிலையில் அகதிகளை தடுத்து நிறுத்தும் பிரிட்டன் அரசின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அகதிகளை தடுத்து நிறுத்துவது சர்வதேச சட்ட விதி மீறல் என்று ஐநாவுக்கான மனித உரிமைகள் குழு பிரதிநிதி விக்கி டென்னட் கூறியுள்ளார். மேலும் ஒரு நாட்டிலிருந்து தாக்குதலுக்கு உள்ளாகி பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை தடுத்து நிறுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings