பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் இருந்து பென்னினஸ் செல்லும் சாலையில் நேற்று பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்ததால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை வரும் தினங்களில் இன்னமும் மோசமாகும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி அலெக்ஸ் மார்பில் எச்சரிக்கை விடுத்தார். அதிலும் ஒரு சில பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் 40 செண்டிமீட்டர் ஆழத்துக்கு பனிப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings