மின்னணு கார் திட்டத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

 

பொதுக் கணக்கு குழு குற்றச்சாட்டு

 

மின்னணு கார் எனப்படும் இ-கார் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பிரிட்டன் அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என பொதுக் கணக்கு குழு குற்றச்சாட்டு சுமத்தியது. மேலும், அவசரகால நடவடிக்கையின்றி, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களின் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான அதிகாரபூர்வ இலக்கும் தவறுவதாக அக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இ}கார்களின் விலை சந்தையில் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், அதை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாய்ண்டுகள் போதுமான அளவில் இல்லை என்றும் பொது கணக்குக் குழு விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த அரசின் செய்தித் தொடர்பாளர், கார் தொழிற்சாலைகளும், ஓட்டுநர்களும் எரிபொருள் கார்களை கைவிட்டு, மின்னணு கார்களை உபயோகப்படுத்தும் வகையில், அரசு 2.8 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது என்றார்.

கார் சந்தையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்னணு கார்களின் விற்பனை அதிகரிக்கின்ற போதிலும், புதிய பதிவுகளுக்கான வீதம் 11 சதவீதத்தை இதுவரை தாண்டவில்லை. ஆகையால், இ-கார்களின் விலையைக் குறைத்து, போதிய சார்ஜிங் பாயிண்டுகளை ஆங்காங்கே நிறுவும்வரை, கார் விற்பனை 100 சதவீதத்தை அடைய வாய்ப்பே இல்லை என்றும் பொதுக் கணக்கு குழு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இதுவரை 30 ஆயிரம் பவுண்டுக்கு குறையாமல், 13 வகையான இ-கார்கள் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

10 + 7 =