முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி 1.5% சரிவு

பனிக்காலத்தில் நீண்ட நெடிய பொதுமுடக்கத்தை எதிர்கொண்டதால், பிரிட்டனின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் சரிந்துவிட்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாலும், காலாண்டின் ஆரம்ப நிலையில் சில்லறை வணித்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்பட்டிருக்கிறது. கரோனா தொற்றுக்கு முன்பு இருந்த நிலையை விட சற்று குறைவாக பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி தற்போது 8.7 சதவீதமாக உள்ளது. அதேவேளையில், சில்லறை வணிகம் மற்றும் பள்ளிகள் செயல்பட தொடங்கியிருப்பதால் மார்ச் மாதம் 2.1 சதவீத வேகத்தில் பொருளாதார வளர்ச்சி பதிவானதாகவும், விரைவில் இயல்புநிலையை எட்டும் என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

thirteen − two =