கர்நாடகாவில் 2 சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்

இந்தியாவில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோய் முதியோரை விட இளைஞர்களையும், சிறுவர்களையுமே அதிகம் பாதிக்கிறது. அந்த வகையில், கர்நாடகத்தின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கும், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும் கருப்பு பூஞ்சை தாக்குதல் கண்டறியப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும், தற்போது கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகத்தில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை தாக்குதல் கண்டறியப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

twenty − nine =