சர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சைக்கு பெயர்பெற்ற நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை மைப்படுத்தி, பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உங்களது 2000ஆம் ஆண்டைய தலைமைத்துவத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அடக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி 2000இல் குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த வன்முறையைக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை கங்கனா வெளியிட்டதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கங்கனாவின் இந்தக் கருத்து சமூகத்தில் வன்முறையை பரப்புவதாக குற்றம்சாட்டிய டுவிட்டர் நிறுவனம், உடனடியாக அவரது கணக்கை முடக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து கங்கனா ரணாவத் கூறுகையில்,

டுவிட்டர் நிறுவனத்தினர் பிறப்பால் அமெரிக்கர்கள் என்ற உணர்வில் எனது கருத்தை அணுகுகின்றனர். அவர்கள் சொல்வதை தான் நாம் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். சினிமா உள்பட எனது குரலை ஒலிக்க ஏராளமான தளங்கள் இருக்கின்றன என்றார் அவர்.

ஏற்கெனவே இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகக் கூறி, கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

2 × one =