வரி ஏய்ப்பு செய்த டிரம்ப் நிறுவன அதிகாரி மீது வழக்கு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓர் அரசியல்வாதி மட்டுமல்லாமல், தேர்ந்த தொழில் அதிபர் என்பதும் அனைவரும் அறிந்ததே. நியூயார்க்கில் அவருக்கு சொந்தமாக நட்சத்திர ஹோட்டல்கள், ஹோல்”ஃ”ப் மைதானங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. இவற்றை நிர்வகித்து வரும் நிதிப் பிரிவு தலைவர் ஆலன் வெய்சிஸ்பெர்க் (வயது 73) கடந்த பல ஆண்டுகளாக தனது வருமானத்துக்கு முறையான வருமான வரி கட்டாதது தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனால், வருமான வரித் துறை விசாரணைக்காக அவர் இன்று நேரில் ஆஜரானார். பின்னர், 1.7 மில்லியன் டாலர் வருமானத்தை மறைத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தனிப்பட்ட முறையில் அவர் மீது பதிவான வழக்கு என்றும், இதனால் டிரம்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

7 + twenty =