in

திருச்சி மாவட்ட ஆட்சியர் கொடிநாள் நிதிவசூல்


Watch – YouTube Click

திருச்சி மாவட்ட ஆட்சியர் கொடிநாள் நிதிவசூல்

 

கொடிநாள் தினம் – திருச்சியில் கொடிநாள் நிதிவசூலை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நிதி அளித்து தொடங்கிவைத்ததுடன், அதிகாரிகளிடம் உண்டியல் வசூல் செய்தார்.

ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதியன்று படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. நமது இந்திய தேசத்தை காத்திடும் முப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோரின் நலன்களை காப்பது சமுதாய கடமையாகும்.

நம்நாட்டின் பாதுகாப்பு பணிக்காக பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள் போரில் வீரமரணமடைந்த மற்றும் காயமடைந்த படைவீரர்களின் சேவையினைப் போற்றும் வகையில் இன்று படைவீரர்கொடிநாள் கொண்டாடப்படுகிறது. கொடிநாள் தினத்தையொட்டி அவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் நிதிவசூலிக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உண்டியலில் நிதி செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்ததுடன், முப்படை வீரர்களின் நலன்காத்திட திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு திருச்சி மாவட்ட மக்களும், அரசு அலுவலர்களும், தனியார் நிறுவனங்களும் தாராளமாக நிதி வழங்கி உதவிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் உண்டியலை எடுத்துக்கொண்டு அதிகாரிகள், மாணவிகளிடம் கொடிநாள் வசூல்செய்தார் ஆட்சியர் பிரதீப்குமார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலன் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு KPY பாலா நிதியுதவி