மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி

 

கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

பிளேக்பூல் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டான். இவன் அப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மின்னல், இடி தாக்கி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனான். இதனால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது. இந்நிலையில், சிறுவனின் உயிர்பிரிந்த அதே இடத்தில் மலர் வளையம் வைத்தும், இரங்கல் குறிப்பு எழுதியும் பொதுமக்கள் புதன்கிழமை கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

கிளிப்டன் ரேஞ்சர்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப் அணியில் ஜோர்டான் இடம்பெற்று விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

2 + twenty =