பயண தடை நீட்டிக்கப்படாது

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பயண தடை மே 15க்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் பெருகி வரும் கரோனா தொற்று காரணமாக அந்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் ஆஸ்திரேலிய பிரஜைகள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், மீறி பயணித்தால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வாரம் அறிவித்தார். இந்த பயண தடை மே 15ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே தாய்நாடு திரும்பும் பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மேலும், ஆபத்தான நேரத்தில் தங்களை ஆஸ்திரேலிய அரசு கைவிடுவதாகக் கூறி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பெடரல் நீதிமன்றக் கதவை பெங்களூருவில் தவிக்கும் 73 வயது முதியவர்
தட்டினார். இதனால், இந்த பிரச்னை சூடுபிடிக்க தொடங்கியது. இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியா- ஆஸ்திரேலியா பயண தடை மே 15க்கு மேல் தொடராது. இந்தியாவில் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்கும் விமான சேவை விரைவில் தொடங்கும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

five × five =