லிவர்பூல் டாக்ஸ்டெத் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கான். இவனது வீட்டின் அருகே பயன்படுத்தப்படாத தரிசு நிலம் ஒன்று பாலைவனம் போல காட்சி அளித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை பயன்படுத்த விரும்பிய கான், அதில் தோட்டம் அமைக்க முடிவு செய்தான்.
இதற்காக இரவும் பகலாக அவன் விதை போட்டு நீரூற்றினான். மேலும் மரக்கன்றுகளை நடுவதற்கு சமூக நல அமைப்புகளிடமும் சிறுவன் நிதி திரட்டினான். வெறும் இரண்டே ஆண்டுகளில் அவனது முயற்சியின் பலனாக அந்த தரிசு நிலம் இப்போது சோலைவனம் போல காட்சி அளிக்கிறது.
பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings