ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜோசியா சாக்ரசெவிஸ்கி. பிரபலன தடகள வீராங்கனை ஆன, இவர் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உலக சாதனை படைத்திருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் முதல் லிவர்ஃபுல் வரை 50 மைல் தொலைவுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அப்போது ஜோசியா யாரும் பார்க்காதவாறு இரண்டரை மைல் தூரத்தை காரில் ஏறி பயணித்து அனைவரது கண்ணிலும் மண்ணை தூவினார். பின்னர் ஒரு வழியாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்ற அன்று ஜோசியா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி காரை பயன்படுத்தியதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவரது நண்பர் ஒருவர் கூறினார். ஆனாலும் இதை ஏற்க மறுத்த தடகள சம்மேளனம், அவரை தகுதி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டது.
GIPHY App Key not set. Please check settings