இத்தாலியில் மாயமான குழந்தையை மீட்ட பத்திரிகையாளர்

இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் அருகே உள்ள பலசூவலோ சல் செனியோ பகுதியைச் சேர்ந்த 21 மாத ஆண் குழந்தை நிக்கோலா தன்டுர்லி. இந்த குழந்தை கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கத்திலிருந்து திடீரென விழித்து, வீட்டை விட்டு வெளியேறியது. மறுநாள் காலை மகனை காணாமல் பரிதவித்த பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். சிறுவனை தேடும் பணியில் போலீஸ், தீயணைப்புத் துறை என 1000 பேர் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் வாயிலாகவும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள புதரின் அருகே அழுது கொண்டு நின்ற அந்த குழந்தையை இத்தாலி பத்திரிகையாளர் கியூசிப் டி தாமசோ என்பவர் மீட்டு, போலீஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார். 2 நாள்களாக காணாமல் போன குழந்தையை மீட்ட பத்திரிகையாளருக்கு பாராட்டு குவிகிறது.

Add your comment

Your email address will not be published.

20 − four =