தமிழக செய்திகள் சில வரிகளில்….

  • மிழகத்தில் கோவிட் 3ஆம் அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
  • மிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த ஜே.கே. திரிபாதி இன்று ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த டிஜிபி ஆக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்.
  • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.49,621 கோடியில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
  • மிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதால், இனி மின்வெட்டு அறவே இருக்காது என்றார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
  • மிழ்நாடு சிறுபான்மையின ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரும்போது அவரது பேச்சை மொழிபெயர்ப்பவர் பீட்டர் அல்போன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ரடங்கால் பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.
  • மிழகத்தில் கடந்த 55 நாள்களில் ரூ.520 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
  • மிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் தொற்றை கண்டறிவதற்கான மரபணு ஆய்வகம் அமைக்கப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

Add your comment

Your email address will not be published.

four × four =