தமிழக முக்கிய செய்திகள்…

* தமிழ்நாட்டில் கோவிட் 19 தொற்று குறைந்த கடலூர், திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

* சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றன.

* தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக சென்னையில் ரூ.2.50 கோடியில் பிரத்யேக பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

* புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. பாஜக சார்பில் ஏ. நமச்சிவாயம், ஜெ. சரவணகுமார், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் லட்சுமி நாராயணன், சி. தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

* திருச்சி- மாலத்தீவு இடையே முதன்முறையாக விமான சேவை பயன்பாட்டுக்கு வந்தது. விமானத்துக்கு வாட்டர் சல்யூட் அடித்து திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஓரிரு வாரத்தில் கட்டுக்குள் வரும் என மருத்துவ நிபுணர் குழு நம்பிக்கை தெரிவித்தது.

* நாடோடி பட துணை நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது.

* தமிழ்நாட்டில் 5,755 ஆக கோவிட் பாதிப்பு நேற்று குறைந்தது.

Add your comment

Your email address will not be published.

four × three =