தமிழக முக்கிய செய்திகள்…

மிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை தொடர்கிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் டெல்லியில் சந்திக்கிறார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு திங்கள்கிழமை வெளியாகிறது. வரும் 22ஆம் தேதி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் 30 நாள்களில் தீர்வு காணப்பட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

sixteen − fourteen =