தமிழகம், புதுவை செய்திகள்…

 

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் 1,000 கிமீ தொலைவுக்கு கிராமச் சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றார் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு.

1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் பிரிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி உறுதியளித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுவையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

sixteen + 16 =