தமிழக செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 70 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால், கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடற்கரை வெறிச்சோடியது.

காகிதங்களை பயன்படுத்தாமல் தமிழக சட்டசபையில் இ-பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் மு.அப்பாவு கூறினார்.

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அருவிகளுக்கு வருபவர்கள் அத்து மீறிப் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

களக்காடு மலையில் இரண்டு நாட்களாக எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், மத்திய அரசிடம் இருந்து அடுத்த தவணை தடுப்பூசி 11-ம் தேதிதான் கிடைக்கும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 3715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவால் தாமதமான டி.என்.பி.எஸ்.சி.நேர்முகத் தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்டத்திருத்த மசோதாவினால் சினிமா துறையின் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மனு அளித்துள்ளது

Add your comment

Your email address will not be published.

16 − 13 =