தமிழக செய்திகள்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு கர்நாடக அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல் பேருந்துகள் இயக்க தொடங்கின. தேநீர் கடைகள்,உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிடும் வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் இன்று டெல்லி சென்றார். அங்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்துப் பேசும் அவர், மேகதாது அணை விவகாரம் மற்றும் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தின் நிலைபாட்டை எடுத்துரைக்கவுள்ளார்.

தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இறந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள், பெற்றோரிடம் ஒப்படைத்த குழந்தை இரண்டரை மணி நேரத்திற்குப் பின்பு உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்குழந்தை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

சென்னிமலை அருகே,கடனைத் திரும்பக் கேட்பதால் கரோனா தடுப்பு மாத்திரை எனக் கூறி விஷ மாத்திரை கொடுத்த சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயியும் உயிரிழந்தார்.

பெருந்தொற்று குறைந்து விட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்தால் மூன்றாம் அலை வராமல் தடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த ஆட்கொல்லி யானை சங்கரை வனத்துறையினர் விடுவித்தனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்றுமுதல் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூபாய் 1.73 கோடி வசூலானது.

Add your comment

Your email address will not be published.

twenty + eight =