தமிழக செய்திகள்… சதமடித்தது பெட்ரோல்!

  • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100யை கடந்தது. 5 மாவட்டங்களில் ரூ.101க்கு விற்பனையானதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
  • தமிழகத்தில் உயர்கல்விக்கான கேட் தேர்வில் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
  • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
  • சென்னை ஐ.ஐ.டி.யிஸ் ஆராய்ச்சி மாணவர் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய 11 பக்க கடிதம் சிக்கியது.
  • தனியாருக்கு சொந்தமான மகளிர் விடுதிகளின் பதிவு கட்டாயம் என்றும், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியது.
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தமாக ரூ.666.43 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
  • முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதியளித்தது.

Add your comment

Your email address will not be published.

one × five =