தமிழக, புதுச்சேரி செய்திகள்…

மிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்ற சி. சைலேந்திர பாபு, முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் நிறுவனத்தில் அதன் ஒரு கோடியாவது காரை அறிமுகப்படுத்திவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

காவிரியில் ஜூன் மாதத்துக்கான பற்றாக்குறை நீரை வழங்க வேண்டுமென காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.

கோயில் நிலங்களுக்கான வாடகை விரைவில் திருத்தி அறிவிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

11 + 9 =