in

அடிப்படை வசதிகள் இன்றி காட்சியளிக்கும் திருக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்


Watch – YouTube Click

அடிப்படை வசதிகள் இன்றி காட்சியளிக்கும் திருக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

 

புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் இன்றி சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் திருக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம். மதுபானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயத்திற்கு கொடுக்கவில்லை என விவசாயிகள் புலம்பல்.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் புதுச்சேரி, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவிக்கப்படும் மணிலா, நெல், எள்ளு, காராமணி, உளுந்து உள்ளிட்டவைகளை விற்பனை செய்வது வழக்கம்.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் விவசாயிகளுக்கு போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை என்று பரவலாக புகார் இருந்து வந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் திருக்கனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சேரும் சகதியுகமாக அடிப்படை வசதிகள் இன்றி காட்சியளிக்கிறது.

மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மணிலா, எள், காராமணி, உள்ளிட்ட விவசாய பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சேரும் சகதியுமாக இருக்கும் இடத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் புதுச்சேரி அரசு மதுபானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட விவசாயிகளின் மீது அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சானூர் பத்மாவதி தாயார் சர்வ பூபால வாகன புறப்பாடு

பாவூர்சத்திரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு