70 லட்சம் பேரின் கணக்கை நீக்கிய டிக்டாக் நிறுவனம்

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் ஆப்பை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இந்தியாவில், சீனா உடனான எல்லை பிரச்சினை காரணமாக டிக் டாக் ஆப்புக்கு ஆப்படித்தார் பிரதமர் மோடி. ஆனாலும், இந்தியாவை தவிர பிற நாடுகளில் டிக் டாக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

 

டிக் டாக் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்றால், அதன் பயனாளர் குறைந்தது 13 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். எனவே, 13 வயதுக்கு குறைவான நபர்களின் அக்கவுண்டை நீக்கி, டிக் டாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 70 லட்சத்து 30 ஆயிரம் பேரின் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச பயனாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது 1 சதவீதத்துக்கும் குறைவு என அந்நிறுவனம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

15 − eight =