வெஸ்ட் மிட்லான்ட்சில் இடியுடன் கூடிய மழை

வீடுகளுக்கு வெள்ளம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லான்ட்ஸ் மாகாணத்துக்கு உட்பட்ட சோலிஹல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுபோன்ற ஒரு வெள்ளத்தை வாழ்நாளிலேயே பார்த்தது இல்லை என்று கூறிய இப்பகுதி மக்கள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த பேரிடர் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு துவம்சம் செய்த ஹரிகேன் புயலின் தாக்கத்தை நினைவுபடுத்துவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

6 + twelve =