கலைஞரின் தொகுதியில் கலக்கும் திமுக!

மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளையாக இருந்தாலும், அவர் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது திருவாரூரில்தான். அவரது மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில், திருவாரூரில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் போட்டியிட்டு தேர்வானார். தற்போது அதே திருவாரூர் தொகுதியில் மீண்டும் கலைவாணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் பகல் 1 மணிவரையிலான 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரத்தின்படி, கலைவாணன் 37,104 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். மறுமுனையில், அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் 22,187 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விநோதினி 10,678 வாக்குகளும், எஸ்டிபிஐ வேட்பாளர் நஜீமா பானு 1,717 வாக்குகளும், மநீம வேட்பாளர் கபிலரசன் 1,372 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

nineteen − eighteen =