in

விருதுநகர் நில அளவைத்துறை அலுவலகம் ஜப்தி செய்தது


Watch – YouTube Click

விருதுநகர் நில அளவைத்துறை அலுவலகம் ஜப்தி செய்தது

 

விபத்தில் கால்களை இழந்த நபருக்கு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட நில அளவைத்துறை அலுவலகத்தில் இருந்த பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்தது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (60). கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 2013ம் ஆண்டு திருச்செந்தூர் சாலையில் தன்னுடன் வேலை பார்த்த சுயம்பு துரை என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது விருதுநகர் மாவட்ட நில அளவை துறை அதிகாரிகள் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த வாகனத்தை ஒட்டுநர் மணிராஜ் ஒட்டி வந்து உள்ளார்

மேலும் சாலை விபத்தில் காயம் அடைந்த மாடசாமியை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் மாடசாமிக்கு வலது கால் முற்றிலும் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த சாலை விபத்து குறித்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு விபத்தில் காலை இழந்த மாடசாமிக்கு விருதுநகர் மாவட்ட நில அளவை துறை 13 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் 2019 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் 3 ஆண்டுகளாக உரிய இழப்பீடு தொகையை விருதுநகர் மாவட்ட நில அளவை துறை வழங்காத நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட மாடசாமி கடந்த 2022 ம் ஆண்டு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாடசாமிக்கு உடனடியாக உரிய இழப்பீடு தொகையை விருதுநகர் மாவட்ட நில அளவை துறை வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து இழப்பீடு வழங்காத விருதுநகர் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இன்று நீதிமன்ற ஊழியர் மற்றும் உறவினர்கள் விருதுநகர் மாவட்ட நில அளவை அலுவலக த்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது

சென்னை வெள்ளம் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி