in

சாலைகளில் மழை நீர் தேக்கத்தின் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள்

சாலைகளில் மழை நீர் தேக்கத்தின் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள்

 

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி , திருநெல்வேலி உள்ளிட்ட 10 ற்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாலை முதல் இரவுவரை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான செண்பகத் தோப்பு, ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நிலையில் இன்று இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கியதால் பொதுமக்கள் மட்டும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கடைகளுக்குள் புகுந்த மழை நீரால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

இராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் செல்லும் வாருகால்களை சரிவர தூர்வாராததால் இது போன்று பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தீபாவளி வர உள்ள நிலையில் ஜவுளி கடைகளுக்கு புத்தாடை வாங்க வந்த பொதுமக்கள் சாலைகளில் மழை நீர் தேக்கத்தின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

What do you think?

ஏன் முதலமைச்சர் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படவில்லை

ராஜபாளையத்தில் யானைத் தந்தங்கள் கடத்த முயற்சி 10 பேர் மீது வழக்குப்பதிவு