in

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் காவலர் குவியும் பாராட்டு


Watch – YouTube Click

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் காவலர் குவியும் பாராட்டு

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் காவல்துறை சார்பு ஆய்வாளர். குவியும் பாராட்டு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொல்லம் மதுரை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

கனமழையால் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்துள்ள சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மழையால் சேதமடைந்து காணப்படக்கூடிய நகர் பகுதியில் உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் சாலையில் உள்ள பள்ளங்களை காரை மண் கொண்டு சீரமைக்கும் பணியை துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் தரவின் பெயரில் நகரப் போக்குவரத்து துறை சார்பு காவல் ஆய்வாளர் தர்மா அவர்கள் பணியில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

சசிவர்னேஸ்வரர் கோவிலில் மகா பைரவாஷ்டமி சிறப்பு ஹோம்

11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு