in

குடிநீர் தொட்டியில் விழுந்த பசுமாடை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்


Watch – YouTube Click

குடிநீர் தொட்டியில் விழுந்த பசுமாடை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

 

நாகூர் கொத்தவச்சாவடி அருகே தனியார் வணிக வளாகத்தில் தரைதல குடிநீர் தொட்டியில்


Service médical à domicile de Medici Generici à Rome

Service médical à domicile de Medici Generici à Rome

Notre équipe fournit un service de soins de santé à domicile, garantissant professionnalisme et confort pour les patients à Rome.

விழுந்த பசுமாடை தீயணைப்புத் துறையினர் நவீன கருவிகளைக் கொண்டு காங்கிரீட் தரை மற்றும் கம்பிகளை அகற்றி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டனர்.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகை, நாகூரில் 36 வார்டுகள் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் இன்னல்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

அவ்வப்போது நகராட்சி ஊழியர்களின் மூலம் கால்நடைகளை பிடிப்பதும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை கால்நடைகள் ஆகிரமிப்பதால் போக்குவரத்து நெரிசல் விபத்து போன்றவையால் பாதிக்கப்படுவதால் கால்நடைகளின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் காரைக்கால் சாலையில் நாகூரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தின் ஒளி சத்தத்துடன் எழுப்பியவாறு வாகன ஓட்டிகள் ‌சென்ற போது மிரண்ட பசுமாடு நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகத்தில் சென்றது.

அப்போது தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக மாடு விழுந்ததால் அங்கு உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் நாகை தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு தரைதல காங்கிரீட் தரையை உடைத்தும் அதில் உள்ள கம்பிகளை அகற்றி பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

இருந்த போதும் மாடு விழுந்த போது சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில் வணிகவளாக வாசலிலேயே பசுமாடு கட்டப்பட்டுள்ளது.

மாட்டின் உரிமையாளர்கள் பொறுப்புணர்ந்து கால்நடைகளை சாலைகளில் விடாமல் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பாடலீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி மகா உற்சவம்

பிரியாணி சாப்பிட்ட மூன்று பேர் உடல் நலம் பாதிப்பு