சிவப்பு பட்டியல் நாட்டு பயணிகளுக்கு பிரத்யேக டெர்மினல்

 

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் திறக்கப்படுகிறது

 

சிவப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தியா உள்ளிட்ட கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து லண்டன் வரும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரத்யேக டெர்மினல் திறக்கப்படுகிறது. சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்ற பயணிகளுடன் இணைந்து வர அனுமதியளிக்கப்பட்டதால், கரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என விமர்சனம் எழுந்தது. இதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 3ஆவது டெர்மினலை பயன்படுத்த வேண்டும் என்றும், அங்கிருந்து அவர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 3ஆவது டெர்மினல் கடந்த ஓராண்டுகாலமாக அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

five + 6 =