டீஸ் பள்ளத்தாக்கை தக்கவைத்துக் கொண்டது போரிஸ் ஜான்சன் கட்சி

 

 

டீஸ் பள்ளத்தாக்கு மேயர் தேர்தலில் 73% வாக்குகளைக் கைப்பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அந்த நகரை தக்கவைத்துக் கொண்டது. இதன்மூலம் அக்கட்சியின் பென் ஹுச்சன் மீண்டும் மேயராவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், டீஸ் பள்ளத்தாக்கு மீண்டும் பெருமை கொள்ள போகிறது. இங்கிலாந்தின் ஆளும்கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி திகழ்வதால், டீஸ் பள்ளத்தாக்கில் நாங்கள் ஏராளமாக செலவு செய்து ஆட்சியைப் பிடித்ததாக கூறுவது தவறு. இந்தப் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் தீர்வு காண இயலாது. டீஸ் பள்ளத்தாக்கில் அமையவுள்ள ப்ரீபோர்ட் மற்றும் விமான நிலைய திட்டங்கள் சரியான திசையில் பயணிக்கின்றன என்றார் அவர்.

பரீபோர்ட் எனும் சுதந்திரமான துறைமுகங்கள் பூகோள ரீதியில் நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்தாலும், வரிச்சலுகை போன்ற பயன்பாடுகளுக்காக நாட்டின் எல்லைகளைக் கடந்து அவை அமைய பெறும்.

Add your comment

Your email address will not be published.

fifteen − 10 =