லண்டன் ஹைட் பார்க்கில் இளைஞருக்கு கத்திக்குத்து

லண்டன் ஹைட் பார்க்கில் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று சூழ்ந்து கீழே தள்ளி, அவரது மார்பில் கத்தியால் குத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், அந்த இளைஞர் சலனமற்ற நிலையில் கீழே கிடப்பதை பார்த்ததும் அந்த கும்பல் தப்பிவிடுகிறது. நூற்றுக்கணக்கானோர் திரளும் ஒரு பூங்காவில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் பதைபதைப்பில் ஆழ்த்தியது. அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen − 13 =