பள்ளி, கல்லூரிகளில் பாலியல் துஷ்பிரயோகம்

 

ஆசிரியர்கள் வருத்தம்

 

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான தாக்குதல்களை துணிந்து தெரிவிக்குமாறு கோரி, கடந்த ஏப்ரலில் பிரிட்டன் அரசு சார்பில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாங்கள் சந்தித்த இன்னல்களை பகிர்ந்துள்ளனர். இதில், அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவர்களில் பெரும்பாலானோர் 9 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.

இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளில் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க அல்லது தவிர்க்க ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பிபிசி ஆய்வு நடத்தியது. இதற்காக 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் வடிவில் வினா எழுப்பப்பபட்டது. இதற்கு பதிலளித்த ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளில் நிகழும் அறுவறுக்கத்தக்க நிகழ்வுகளை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தங்களுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும், இதை எதிர்கொள்வதற்கான தொழில்சார் வழிமுறைகளும் பள்ளிகளில் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதுமட்டுமன்றி, பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பாலியல் உறவுகள் குறித்த அம்சங்களை மாணவர்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் தங்களுக்கு புலப்படவில்லை என்றும் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

five + eleven =