இன்றைய தமிழக செய்திகள்…

* தமிழ்நாட்டின் நிதிநிலையை சீர்படுத்துவதே தனது முதல் பணி என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

*  சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் மு. அப்பாவு ஒத்திவைத்தார். இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார்.

* உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தும் பொருட்டு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

* டெல்டா பிளஸ் கோவிட் தொற்று குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. அத்தகைய பாதிப்பு ஏற்பட்ட செவிலியர், அதிலிருந்து பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், மாநிலத்திலேயே முன்மாதிரியாக திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்தியாவில் டெல்டா பிளஸ் கோவிட் தொற்றால் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் முதல் முதலாக 65 வயது பெண் நேற்று உயிரிழந்தார்.

* சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

* கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 7.492 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.

* தமிழகத்தில் புதிதாக 6,162 பேருக்கு கோவிட் தொற்று நேற்று உறுதியானது. அதிகபட்சமாக கோவையில் 756 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

six − five =