தமிழக முக்கிய செய்திகள்…

  • லிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் 7 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
  • மிழகத்தில் கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், நீலகிரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. இதன்மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் எழுந்தது.
  • 10ஆம் வகுப்புத் தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கோயில்கள் திறக்கப்படுவதால், கோயில் பணியாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • டெல்டா பிளஸ் தொற்றை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
    உடனடி மின் இணைப்புகளை 3 நாள்களில் வழங்க வேண்டுமென மின்வாரியத்தின் பகிர்மானப் பிரிவு இயக்குநர் உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

twenty − nine =