தமிழகம், புதுச்சேரி முக்கிய செய்திகள்…

மிழகத்தில் வரும் 26ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

பிளஸ் 1-இல் தேர்ச்சி பெறாத 33,357 மாணவர்கள் பிளஸ் 2வில் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று ஜாக்பாட் அடித்திருக்கின்றனர்.

பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதால், இந்த ஆண்டு பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளின் கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதன் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

Add your comment

Your email address will not be published.

4 × three =