கருப்பு பூஞ்சை தாக்குதல்

 

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

 

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றை போல், கருப்பு பூஞ்சை நோயும் பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே கரோனா தொற்றை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருவதால், கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்வதற்கான லிபோசோமால் அம்போடெரிசின் பி என்கிற மாத்திரையை போதிய அளவில் இருப்பு வைத்து மாநிலங்களுக்கு தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதினார்.

Add your comment

Your email address will not be published.

8 + 20 =