ஸ்வீடனில் 800 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடல்

சைபர் தாக்குதல் எதிரொலி

ரஷ்யாவை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் சைபர் கிரிமினல்கள் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த ஐடி நிறுவன சாஃப்ட்வேர்களில் ஊடுருவி அவற்றை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

இந்தநிலையில் ஸ்வீடனில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் இணையதளத்திலும் அவர்கள் ஊடுருவி கைவரிசை காட்டியதால், அதன் செயல்பாடுகள் முடங்கின.

குறிப்பாக பில் போடும் இயந்திரங்கள் செயலிழந்தன. இதனால் ஸ்வீடனில் 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் கிளைகள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

Add your comment

Your email address will not be published.

two × 4 =