இத்தாலியில் கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கிய 52 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர் அருகே உள்ளது சாண்டா மரியா கேபூவா சிறை. கடந்த ஆண்டு ஏப்ரலில் இத்தாலியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, சிறையிலும் கோவிட் தொற்று பரவியது. இதனால், சிறை கைதிகள் பாதுகாப்பு கோரி, சிறை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சிறை காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கொடுமைப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது செய்தி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கைதிகளை தாக்கிய 52 சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து இத்தாலி அரசு உத்தரவு பிறப்பித்தது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 2 =