கரும்பு விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வி
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் தலைமையில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வி ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மூடப்பட்ட நிலையில் நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 128 ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் முழுவதையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டு விவசாயிகளை கடலில் இருந்து விடுபட செய்ய வேண்டும்.
நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்தும் 353 நாளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் ஆலையில் என தற்போது வரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வி அடைந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகள் மற்றும் ஆலையை வாங்கிய கால்ஸ் நிறுவனம் விவசாயிகள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் 75 சதவீத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதாகவும் மீதமுள்ள தொகையை பின்பு தருவதாகவும் ஆளை நிர்வாகத்தின் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது ஆனால் இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 100% உடனடியாக வழங்க வேண்டும் வட்டியுடன் வழங்க வேண்டும் மேலும் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் அனைத்தையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர் மேலும் அரசு தங்களது கோரிக்கை நிறைவேற்றாத வரை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் உடன்படி போவதில்லை எனக் கூறி வெளியேறினார்.