இந்திய முக்கிய செய்திகள்…

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பாஜக உறுப்பினர்கள் திறம்பட பதிலளிக்க வேண்டுமென பிரதமர மோடி அறிவுறுத்தினார்.

கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இதுவரை ரூ.40,000 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே 6 பிரமாண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது.

டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

கோவிட் 2ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் கடந்த 15ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 45,432 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

போர் விமான கருவிகளை தயாரிப்பதற்கான அதிக வீரியம் கொண்ட பீட்டா டைட்டானியம் என்ற உலோக கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியது.

Add your comment

Your email address will not be published.

nineteen − sixteen =