பிரிட்டனில் தலைவிரித்தாடும் இந்தியவகை கரோனா

 

பிரிட்டனில் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேருக்கு இந்திய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் மாத் ஹான்காக் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை வரை 2,323 ஆக இருந்த இந்திய வகை கரோனா பாதிப்பின் எண்ணிக்கை, அடுத்த 2 நாள்களில் 27 சதவீதம் அதிகரித்து 2,967 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. ஆகையால், வைரசுக்கும், தடுப்பூசிக்கும் இடையிலான ஓட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், இதிலிருந்து விடுபட பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் மாத் ஹான்காக் அழைப்பு விடுத்தார்.

பிரிட்டனில் போல்டன், பிளாக்பன், டார்வென், பெட்போர்டு ஆகிய நகரங்களில் இந்தியவகை கரோனா அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

15 + twenty =