“பிரிட்டன் பயணிகளை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்துங்கள்”

ஜெர்மனி அதிபர் ஆவேசம்

பிரிட்டனிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, குவாரண்டைன் மையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கெல், அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார். டெல்டா தொற்றின் தாக்கம் பிரிட்டனில் அதிகரித்து வருவதால், அது மற்ற ஐரோப்பிய நாடுகளையும் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
அதேசமயம், பிரிட்டனிலிருந்து கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இதேபோல், பிரிட்டனிலிருந்து இத்தாலி செல்பவர்கள் தங்களை 5 நாள்கள் மட்டும் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. பிரிட்டனிலிருந்து ஃபிரான்ஸ் செல்பவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி சென்று வரலாம்.

Add your comment

Your email address will not be published.

4 − four =