in

பிரிட்டனில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பு

பிரிட்டனில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 66 ஆக உள்ளது. இது வரும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது இப்போது அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

ஏற்கனவே பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுவது அதிகரிக்கப்பட்டதால் அந்நாடு கொழுந்து விட்டு எரிகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் பிரான்ஸ் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால் பிரிட்டனிலும் அதுபோன்று நடக்காதவாறு பிரிட்டன் அரசு பார்த்துக் கொள்கிறது. மேலும் இப்போதைக்கு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யவில்லை என்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பிரிட்டன் பகிரங்க எச்சரிக்கை

ஜெர்மனுக்கு பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாராட்டு