நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு

 

பிரிட்டனில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியதால், எதிர்க்கட்சி பிரமுகர்கள் அடங்கிய நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க அக்கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர் முடிவு செய்திருக்கிறார்.
முன்னதாக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஏஞ்சலா ரேய்னர் வசமிருந்த தேசிய பிரசாரக்குழு ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்ததால், கெயிர் ஸ்டார்மர் உள்கட்சி தலைவர்களின் கண்டனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள அவர், இந்த வாரம் முழுவதும் அந்த பணியில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளரான டெபரோ மாட்டின்சனின் உதவியை ஸ்டார்மர் நாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் உருவாக்கப்படுவது நிழல் அமைச்சரவை ஆகும். இதில் பிரதமர் மற்றும் அமைச்சரவையை போல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகித்து, பாராளுமன்ற கூட்டத் தொடரில் அரசை எதிர்கொள்வதற்கான யுக்திகளை வகுப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

3 × 2 =