தமிழகம், புதுச்சேரி செய்திகள்…

மீனவர்களின் நலனுக்கு எதிரான கடல்சார் மீன்வள மசோதாவை நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேணாடம் என கூறி, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

தமிழகத்துக்கு மேற்கொண்டு 8 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. அவற்றை மாவட்ட வாரியாக பிரித்தனுப்பும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றுமுதல் வரும் 24ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க திட்டமிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கான தமிழ்ப் பாட புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்கும் என்றார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தான 49 திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

four × four =