பிரிட்டனில் பிரபல கோடீஸ்வரர் ஆன ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான வர்ஜின் ஆர்பிட் நிறுவனம் உள்ளது. செயற்கைக்கோளுக்கு தேவையான உதிரி பாகங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து கொடுத்த செயற்கைக்கோள் பிரிட்டன் மண்ணிலிருந்து ஏவப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் இந்த நிறுவனத்தின் பெயர் கெட்டுப் போனது. மேலும் வர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அமெரிக்காவில் 46 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இதனால் தொடர் நஷ்டத்தை சந்தித்த அந்த நிறுவனம் 85 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings